மீண்டும் மழையால் போட்டி தாமதம்

0
186

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி பெரும்பாலான நேரங்களில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி இன்று நடக்க இருந்த நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவது தாமதம் ஆகிறது.

Previous articleகன்னியாகுமரி தொகுதி எம்.பி. உடல்நிலை கவலைக்கிடம்… சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!
Next articleமனிதர்களைப் போலவே மீன்பிடிக்கும் புத்திசாலி பறவை! பறவையின் அசத்தும் வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here