கும்பகோணம் மாவட்டமா.? எம்.எல்.ஏ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்

0
198

கும்பகோணம் மாவட்டமா.? எம்.எல்.ஏ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்

சில நாட்களாக சமூக வலைதளங்களில் கும்பகோணத்தை தலைமையிட மாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக சில தகவல்கள் பரவிவருகின்றது. மிகப்பெரிய வரலாற்று பின்னணியும்,பாரம்பரியமும் கொண்டுள்ள கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பது போலவே, கும்பகோணத்தில் தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம் போன்றவை இருக்கிறது. கடந்த 1866 முதல் கும்பகோணம் சிறப்பு நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

இதைப்போலவே, கும்பகோணத்தின் மத்திய கூட்டுறவு வங்கியானது, நாகை மாவட்டம் வரை தன்னுடைய சேவையை இன்றளவும் வழங்கி வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டமும் செயல்படுகிறது. மேலும், கும்பகோணத்தில் தான், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்டத்துக்கான தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

மேலும், மாவட்ட தலைமையகத்துக்கு தேவையான முக்கிய அம்சங்களான பதிவாளர் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போன்றவையும் இருக்கின்றது. இந்நிலையில், கும்பகோணம் தனி வருவாய் மாவட்டம் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றது.

இதன்காரணமாக கும்பகோணம் மக்களின் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஆனால், இதுகுறித்து, அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. கூட்டத்தொடரில் இதுபற்றி பேசப்போவதுமில்லை என்கின்றார் கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன்.

Previous articleமத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு
Next articleசெயற்கை இதயம் பொருத்தி 18 மாதங்கள் கழித்த பிறகு செயல்பட்ட அதிசயம்