கொரோனாவால் இந்தியாவின் பொருளாதார நிலை!!

0
169

நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பொதுவாக அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது.

12 மாதங்களைக் கொண்ட நிதியாண்டில் ஒவ்வொரு காலாண்டாக,அதாவது மூன்று மாதங்களாக பிரிக்கப்பட்ட முந்தைய ஆண்டின் அதே மாதங்களில் இருந்த ஜிடிபி உடன் ஒப்பிட்டு வளர்ச்சி முடிவு செய்யப்படுகிறது.

ஒரு நாட்டின் ஜிடிபி தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முந்தைய இரண்டு கால் ஆண்டுகளோடு ஒப்பிடும்போது குறைவாக இருந்தால் அந்த நாடு பொருளாதார சரிவை சந்திப்பதாக புறப்படுகிறது.

அந்தவகையில் கொரோனா நோய்த்தொற்று நெருக்கடிக்கு பிறகு இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு ஆகிய இரண்டுமே முந்தைய ஆண்டை விட குறைவான ஜிடிபி வளர்ச்சியை பெற்றுள்ள நாடுகளில்  பொருளாதார சரிவை கண்டுள்ள நாடாக கருதப்படுகிறது.

அப்படிப் பார்த்தோமானால் உலகில் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியான இந்தியா, கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்த நிலையை கண்டு வருகிறது.

எனவே கொரோனா நோய்த்தொற்று கொரோனா பிறகு முந்தைய ஆண்டின் மாதத்தோடு ஒப்பிடுகையில் ஜிடிபி வளர்ச்சியில் மிகப்பெரிய சரிவு இல்லை.

அந்த வகையில் ஜனவரி- மார்ச் வரையிலான ஜிடிபி 3.1% உயர்ந்தும், ஏப்ரல்-ஜூன் வரை 16.5% குறைந்தும் காணப்படுகிறது  

ஏப்ரல்-ஜூன் மாதங்களில் ஜிடிபி வளர்ச்சி அதிக சரிவை சந்தித்திருந்தாலும் கொரோனா நோய்த்தொற்று  பாதிப்புக்கு இடையிலும் பொருளாதார சரிவிலிருந்து தப்பும் சீனா போன்ற ஒருசில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என நிபுணர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Previous articleநறுமணப் பொருள்களின் ஏற்றுமதி நிலவரம்!!
Next articleவெள்ள பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய வேண்டும் ! மக்களின் கோரிக்கை !