ஐதராபாத்தில் உள்ள பெண் ஒருவர், தன்னை பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். புகாரில் அந்தப் பெண்ணை, மாணவர் சங்கத்தின் தலைவர்கள், மருத்துவர்கள், நகை வியாபாரிகள், சினிமா துறையை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் என தன்னை பெங்களூர் மற்றும் அமெரிக்காவிலும் 5000 முறைக்கு மேல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டி கூறப்பட்டிருந்தது.
மேலும் அந்தப் பெண் கடந்த 2009ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அங்கு கணவரின் உறவினர்களே தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் 2010 இல் விவாகரத்து பெற்று அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.
இதற்குப் பிறகு தான் கல்லூரி படிப்பைத் தொடர்ந்ததாகவும், கல்லூரியில் பலர் தன்னை வன்புணர்வு செய்ததாகவும், மேலும் கூட்டுப் கூட்டுப்பாலியல் வன்முறை செய்ததாகவும் கூறியிருந்தார்.
மேலும், தன்னை வன்புணர்வு செய்யும் போது வீடியோக்களை எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
என்னைப் போன்று இன்னும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் ஆரம்ப கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.