டெல்லியில் 52 வயதான பெண் ஒருவருக்கு தனது உடலில் 50 கிலோ எடையுள்ள கட்டியானது வயிற்றில் வளர்ந்து இருந்தது.
டெல்லியில் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த 50 கிலோ கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்து உடலில் எடையானது 106 கிலோவாக அதிகரித்து இருந்தது. இதனால் அந்தப் பெண்ணிற்கு சுவாசக் கோளாறு, அடிவயிற்றில் கடுமையான வலி மற்றும் நடப்பதில், படுப்பதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால அப்பல்லோ மருத்துவமனையில் சோதித்துப் பார்த்ததில், அந்தப் பெண்ணின் கருப்பையில் மிகப்பெரிய கட்டி ஒன்று படிப்படியாக வளர்ந்து வந்தது தெரியவந்தது.
இவருக்கு சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனையின் இரைப்பை குடல் மற்றும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் ஆலோசகரான மூத்த மருத்துவர் அருண் பிரசாத் தலைமையிலான குழு, ஆகஸ்ட் 18-ம் தேதி அன்று 50 கிலோ எடையுள்ள கட்டியை அகற்ற 3.30 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்தக் கட்டியை வெளியேற்றினர்.
இது பற்றி டாக்டர் அருண் பிரசாத் கூறியபோது, “ஒரு மனிதரது உடலில் 50 கிலோ எடையுள்ள கட்டியை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. இதற்கு முன்பு ஒரு பெண்ணின் கருப்பையில் 30 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி இருந்தோம்.
இந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டியை அகற்றுவது மிக சிரமமாக இருந்தது. அந்தப் பெண்ணின் உடலுக்கு சிகிச்சைக்கு முன்பும், பின்பும் ஆறு யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது.
மேலும் வயிற்றில் லேப்ரோஸ்கோபி அல்லது ரோபோ உபகரணங்களைப் பயன்படுத்த வயிற்றில் இடம் இல்லை என்பதால் பாரம்பரிய அறுவை சிகிச்சை முறைகளையே பின்பற்ற வேண்டியிருந்தது.
காஸ்டோ எண்டாலஜி, மகப்பேறு, ஆகஸ்தீஸியாலஜி ஆகிய நிபுணர் குழுக்களின் முயற்சியால்தான் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது” என அந்த மருத்துவர் கூறினார்.