1 மணி நேரத்தில் முடியை வளரச்செய்யலாம்:! எப்படியென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!

0
225

தலைமுடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் பெரிதும் பயன்படுகின்றது என்பதை நாம் அறிந்ததே.ஆனால் தேங்காய் பால் தேய்த்தால் முடி இரண்டு மடங்கு வேகமாக வளரும் என்பதனை எத்தனை பேருக்கு தெரியும்?வாங்க தெரிந்துகொள்ளலாம்!

தேங்காய் பால்

தேங்காய் பாலில் அதிக அளவிலான புரதங்கள்,இரும்புச்சத்து, கால்சியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ்,கொழுப்பு,சோடியம் ஆகிய சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.இந்த தேங்காய் பாலானது முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகமிக பயன்படுகின்றது.

தேங்காய் பால் தயாரிக்கும் முறை:

கடைகளில் வாங்கும் தேங்காய் பாலை விட வீடுகளில் தயாரிக்கும் தேங்காய்ப்பால் நல்ல பலன்களைத் தரவல்லது.

அப்பொழுதே.உடைத்த ஒரு தேங்காய் மூடியை எடுத்துக்கொண்டு அதை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும்.

அந்த துருவிய தேங்காயை வெள்ளைத் துணியில் போட்டு நன்றாக பிழிந்தால், அதனுள் இருக்கும் சாறு வரும் இதனை கப்பில் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த தேங்காய் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக சூடாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த சூடான தேங்காய் பாலை குளிர வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து கூட ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

முடி வளர்ச்சிக்கு தேங்காய் பாலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!

வழிமுறை 1:

தேங்காய் பாலை நீங்கள் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான சூட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் பாலை முடி வேர்களில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

இதனை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து விட்டு பிறகு நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு போட்டு தலையை கழுவிக் கொள்ளலாம்.

இந்த தேங்காய் பாலானது ஒரு கண்டிஷனர் போல செயல்படும்.எனவே உங்கள் முடி பளபளப்பாகவும் இருக்கும்.சுருட்டை முடி உள்ளவர்களும் இந்த தேங்காய் பாலை பயன்படுத்தினால் தலை முடியானது ஸ்மூத்தாக இருக்கும்.

இந்த தேங்காய் பால் மசாஜை வாரம் இருமுறை பயன்படுத்த வேண்டும்.

வழிமுறை 2

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால்:4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு:2 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

தேங்காய் பால் 4 டீ ஸ்பூன் எடுத்து, இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும்.

பிறகு இந்த கலக்கிய சாற்றை 4 மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.காலையில் குளிப்பவர்கள் இரவிலேயே இந்த கலவையை கலந்து வைத்து விடலாம்.

குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரே
இந்த சாறை முடியின் வேர்களில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.பின்னர் நீங்கள் வழக்கம்போல் உபயோகப்படுத்தும் ஷாம்பு போட்டு தலையை கழுவிக் கொள்ளலாம்.

இவ்வாறு வாரம் இருமுறை இதனை தேய்த்து குளித்தால் உங்கள் முடி கருமையாக வளரும்.மேலும் பொடுகுத் தொல்லையில் இருந்தும் நீங்கள் விடுபடலாம்.

Previous articleகுளிக்கும் போது இதை தேய்த்துக் குளியுங்க! உடல் முழுவதும் வெள்ளையாக பளிச்சுனு மாறுவதைப் பாருங்க!
Next articleருசியைக் கூட்டும் சூப்பரான சமையல் குறிப்புகள்..!!