அயோத்தி வழக்கு, ரபேல் வழக்கு, சபரிமலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் நீதிபதியாக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும்,தற்போதைய மாநிலங்கவை உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் தான் அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக வின் முதல்வர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தருண் கோகாய் கூறி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
அண்மையில் நடைப்பெற்ற
அயோத்தி வழக்கில் ரஞ்சன் கோகாய் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாகவும்,இதன் மூலம் அரசியலில் நுழைந்து அவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆனதாகவும் மேலும் மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவற்றில் தலைவராகியிருக்க வாய்ப்புகள் எல்லாம் இருந்தும் அவருக்கு அரசியல் மீதுள்ள ஈடுப்பாட்டினால் தான் மாநிலங்களவைப் பரிந்துரையை ஏற்று மாநிலங்கவை உறுப்பினர் ஆனார் என காங்கிரஸ் தலைவர் தருண் கோகாய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த ரஞ்சன் கோகாய் நான் அரசியல்வாதி கிடையாது,முதல்வர் வேட்பாளராகவும் எண்ணமும் எனக்கு கிடையாது மாநிலங்கவை நியமன எம்.பி பதவி என்பது வேறு,ஒரு கட்சியோட எம்.பியாக தேர்வு செய்யப்படுவது என்பது வேறு , இரண்டிற்கும் வித்தியாசம் இருப்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நியமன எம்.பி என்ற அடிப்படையில் என்னுடைய கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க முடியும் அதற்காக நான் அரசியல்வாதியாகி
விட முடியுமா ?எனக்கூறி அசாம் மாநில பாஜக வின் முதல்வர் வேட்பாளர் குறித்து வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.