5 நாள் சாப்பிட்டால் போதும் கால்சியம் குறைபாடு இருக்காது! இடுப்பு வலி கழுத்து வலி முதுகு வலி இருக்காது!
வயதாகினால் அனைவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கும் அது கை கால்வலி, இடுப்புவலி, முதுகு வலி.
வயதாகி போவதனால் எலும்புகள் தேய்மானம் அடைந்து கால்சியம் குறைபாடு ஏற்பட்டு நமக்கு அனைத்து வலிகளும் வர ஆரம்பிக்கும்.
இதனை மருத்துவர்களிடம் சென்று மாத்திரைகள் சாப்பிட்டு வருவதால் உங்களுக்கு அப்போதைக்கு மட்டுமே வலி போகலாமே தவிர நிரந்தரமாக நீக்க முடியாது.
நிரந்தரமாக நீக்க வேண்டுமெனில் நீங்கள் இயற்கையான முறையினை பயன்படுத்த வேண்டும்.
ஐந்து நாள் சாப்பிட்டால் போதும் உங்களது அனைத்து வலிகளும் காணாமல் போகும் இயற்கை முறையினை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. கருப்பு உளுந்து 4 ஸ்பூன்
2. பச்சரிசி ஒரு ஸ்பூன்
3. பால் ஒரு டம்ளர்.
4. தேவைக்கேற்ப தண்ணீர்.
செய்முறை:
1. முதலில் கருப்பு உளுந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளை உளுந்தை தவிர்த்து விடுங்கள். கருப்பு உளுந்தை உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அடுப்பில் வாணலி சட்டி வைத்து கறுப்பு உளுந்தை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.
3. மணம் வந்ததும் பச்சரிசியை போட்டு வறுக்கவும்.
4. ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
5. இப்பொழுது அடுப்பில் பாத்திரம் வைத்து தயார் செய்த பொடியை இரண்டு ஸ்பூன் போட்டு ஒரு டம்ளர் காய்ச்சாத பாலை ஊற்றவும். பின் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றவும். கைவிடாமல் கலக்கவும். ஏலக்காய் சுவைக்காக போட்டுக் கொள்ளலாம்.
6. கஞ்சி நன்கு வெந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
7. நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, வெல்லம், கருப்பட்டி இதில் ஏதாவது ஒன்றை சுவைக்காக சேர்த்து கொள்ளலாம்.
8. பால் பிடிக்காதவர்கள் வெறும் தண்ணீர் மட்டும் சேர்த்து கொள்ளலாம்.
நீங்கள் அதிகமாக பொடி செய்து கூட வைத்துக் கொள்ளலாம். ஒரு கிலோ உளுந்து என்றால் கால் கிலோ பச்சரிசி போட்டால் சரியாக இருக்கும். அரைத்து கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
ஐந்து நாட்கள் தொடர்ந்து இந்த கஞ்சியை குடித்துவந்தால் உடம்பில் உள்ள முதுகு வலி,கை கால் வலி அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் இல்லாமல் போய்விடும்.