இனி ஆதார் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் கட்டணம்!! யுஐடிஏஐ அறிவிப்பு!!

0
158

ஆதார் அட்டையில் தகவல்களை மாற்ற கட்டணம் செலுத்தும் முறையை தற்போது யுஐடிஏஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் வங்கி கணக்கு தொடங்குவது தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதார் கார்டு அவசியமாகி உள்ளது. இந்நிலையில் ஆதார் விவரங்களில் தவறுகள் நேர்ந்தால் உரிய ஆவணங்களை கொண்டு ஆதார் பதிவு மையம் (ஆதார் சேவா கேந்திரா) மூலமாகவோமோ, ஆன்லைன் மூலமாகவோ இலவசமாக சரிசெய்து கொள்ளும் நடைமுறை இதுவரை இருந்தது.

இந்நிலையில், தற்போது ஆதார் இணைப்பை நிர்வகிக்கும் யுஐடிஏஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை இலவசமாக மேற்கொள்ளப்பட்ட திருத்த பணிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முகவரி திருத்தங்களுக்கு 50 ரூபாயும், பயோமெட்ரிக் திருத்தங்களுக்கு 100 ரூபாயும், இதுதவிர ஒன்றுக்கு மேற்பட்ட திருத்தங்களுக்கு 100 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்தியாவில் புதிய உச்சத்தை அடைந்துள்ள கொரோனா தொற்று!!
Next articleஒன்பது லட்சத்தை நெருங்கி வரும் கொரோனா உயிரிழப்பு