பேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்!ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அதற்கு முன்னதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட விதத்திலும் பார்த்தால் தொடர்ந்து அக்கட்சியின் செயல்பாடு இறங்கு முகமாகவே உள்ளது. சட்டமன்ற கூட்ட தொடரில் முக்கியமான விவாதங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறி விவாதம் செய்யாமல் எதாவது ஒரு காரணத்தை கூறி பெரும்பாலும் வெளிநடப்பு செய்வதையே வழக்கமாக கொண்டிருந்ததது.
அப்படியே கூட்டத்தொடரில் கலந்து கொண்டாலும் அதில் பேசும் போது கடந்த காலங்களில் தங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சியின் சாதனைகளை தங்களுடைய சாதனையாக கூறுவது என தொடர்ந்து காப்பியடிக்கும் அரசியலே செய்து வந்தது. இது மட்டுமல்லாமல் திமுகவின் பொது நிகழ்சிகளில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முக்கியமாக உளறாமல் பேசியதில்லை.ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை கூட சரியாக சொல்லாமல் உளறியது தான் அவரது செயல்படா தன்மையை மக்களுக்கு வெளிபடுத்தி காட்டியது.
இது மக்கள் மத்தியில் மட்டுமின்றி அக்கட்சியின் தொண்டர்களிடையேயும் விமர்சனத்தை உண்டாக்கியது. இவ்வாறு முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் செயல்படாமல் இருந்த காலத்திலிருந்து தொடர்ந்து கட்சியின் வளர்ச்சி இறங்குமுகமாகவே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக செய்ய முடியாததை எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்து வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மாற்று கட்சியினர் இது குறித்து கேட்டால் ஆட்சிக்கு வராமல் எப்படி செய்ய முடியும் என்று தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து திமுக பின் வாங்கியது.
இவ்வாறு கொடுத்த வாக்குறுதிகளில் தான் பின் வாங்குகிறது என்று விட்டால் தற்போது வெற்றி பெற்ற எம்பிக்களின் செயல்பாடுகளும் பேசுவதொன்று செயல்படுவதொன்று என இருக்கிறது.சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி ராசா மத்திய அரசு செயல்படுத்த முயற்சிக்கும் NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.தேச பாதுகாப்பிற்காக செயல்படுத்தபடும் இந்த திட்டதிற்கு எதிராக ராசா கேள்வியெழுப்பியது கடும் விமர்சனத்தை உண்டாக்கியது.
மேலும் இது குறித்த செய்தியை படிக்க: தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது? திமுக எம்.பி ராசாவுக்கு அமித்ஷா கொடுத்த பதிலடி
திமுக தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமாரிடம் ட்விட்டரில் கேள்வி கேட்டிருந்தார். அவரது கேள்விக்கு பதிலளித்த திமுக எம்பி தாங்கள் அந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்றும் மாறாக அதை வரவேற்பதாகவும்,ஆதரித்து வாக்களித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் கொண்டு வரும் சட்ட திருத்ததிற்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். சட்டத்தை எதிர்த்து பேசுவது போல் பேசிவிட்டு பிறகு அதே சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
இதே போல சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா அத்திவரதரை தரிசித்ததும் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. பொது மக்கள் மத்தியில் கடவுள் மறுப்பு மற்றும் மூட பழக்கவழக்கங்களை எதிர்த்த பெரியாரின் கொள்கையை பேசும் திமுக தலைவர் தனது குடும்பத்தினர் கோவிலுக்கு செல்வதில் ஏன் இந்த கொள்கையை பின்பற்றவில்லை. கொள்கையெல்லாம் தொண்டர்களுக்கு மட்டும் தானா என பல விதங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : திமுக உதவியுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி மக்கள் அதிர்ச்சி!
இவ்வாறு தேர்தல் வாக்குறுதிகள்,கட்சியின் கொள்கை,கடந்த கால செயல்பாடுகள் மற்றும் தற்போதைய செயல்பாடு என அனைத்திலும் திமுக இரட்டை வேடம் போடுவது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.