மீண்டும் மாலை நேர மருத்துவ மையம் தொடங்கப்படுமா ? மக்களின் எதிர்பார்ப்பு !!

மீண்டும் மாலை நேர மருத்துவ மையம் தொடங்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு !!

சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்டு 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ,14 சமுதாய நல மருத்துவமனைகள் ,3 மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன. இதில் புற்றுநோய்க்கான சிகிச்சை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது.மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சிறப்பு மருத்துவ சேவைக்கு அரசு பொது மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பொதுவாகவே மக்கள் மாலை நேரங்களில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெறுவது ஒரு பழக்கமாக மாறி வருகிறது. இதனால் மாநகராட்சியில் மாலை நேரங்களில் சரியாக சேவைகள் கிடைப்பது கடினமாக இருப்பதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனியார் மருத்துவமனைகள் அதிகமாக வசூலிப்பதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தன.

இதை தடுக்கும் வகையில் மத்திய அரசின் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் மாலை நேர மருத்துவ மையங்கள் 2018-ஆம் ஆண்டு தொடங்ப்பட்டு, இதுவரை நடத்தி வருகின்றனர்.

இதில் 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை செயல்படுகின்றது.இந்த நேரத்தில் குழந்தைகள் நலம், மகளிர் நலம், கண், மூக்கு ,காது ,தோல் டோடை மன நலம் ,பிசியோதெரபி, ஆர்த்தோ ஆகிய சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் இந்த நேரத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா காலத்தில் தடுப்பு நடவடிக்கையாக இம்மயங்கள் செயல்படாததால் சர்க்கரை நோயாளிகள் சிறப்பு மருத்துவ சேவையை கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பாக வியாசர்பாடி பகுதியில் சேர்ந்த நோயாளிகள் சிலர் தனியார் கிளினிக்கு சென்றால்,சிறப்பு மருத்துவ ஆலோசனைக்கு மட்டும் சுமார் ரூ.500 வரை வசூலிக்க படுவதாகவும், சில மருத்துவர்கள் ஆலோசனை கட்டணமாகவே ரூ.150 வாங்கிக்கொண்டு ரூ. 800 வரை அத்தியவசியமற்ற மருந்துகளை எழுதிக் கொடுப்பதாக புகார் கூறப்படுகிறது. எனவே உடனடியாக மாலைநேர சிறப்பு மருத்துவ சேவையை சென்னை மாநகராட்சி தொடங்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாலை நேர மருத்துவ சேவை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

 

 

 

 

Leave a Comment