இந்தியா – சீனா நாடுகளின் எல்லைப் பகுதியான லடாக்கில் பதற்றமான அபாயகர சூழல் ஏற்பட்டுள்ளதால் ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியா – சீனாவின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான லடாக்கில் கடந்த இரண்டு நாட்களாக மோதல் சூழலால் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக சீன ராணுவம் எல்லைக்குள் அத்துமீறி வந்ததால், இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு பதிலடி கொடுத்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்திய ராணுவம், சீனா ராணுவம் அத்துமீறியதாக கூறப்படும் செய்தியை சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மீண்டும், லடாக் எல்லைப்பகுதியில் உள்ள ஏரியின் அருகே சீனா ராணுவம் அத்துமீறி நுழைந்தாகவும், சீன ராணுவத்தின் அத்துமீறல் இந்திய ராணுவம் முறியடித்து உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் மீண்டும் சீன ராணுவம் அங்கு வரக்கூடும் என அந்த எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களை முன்னெச்சரிக்கையாக குவித்து வருகிறது.
மேலும் அங்கு ராணுவ வீரர்களின் வருகையை கண்காணிக்க அதைவிட முக்கியமான பகுதியாக இருப்பதால் சீன ராணுவம் மீண்டும் அங்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லடாக் எல்லைப்பகுதியில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய முப்படைகளின் தளபதியான பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த தீவிர ஆலோசனையானது டெல்லியில் உள்ள ராஜ்நாத்சிங் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.