பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

0
181

பப்பாளி பழம் அனைவரும் அறிந்ததே மிகவும் எளிமையாக கிடைக்க கூடிய ஒரு பழம் ஆகும். இப்படி எளிமையாக கிடைப்பது நாம் அனைவரும் அதிகமாக உண்பதில்லை. பப்பாளி மரத்தில் அதனுடைய இலை, பழம், விதை இப்படி அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தவை ஆகும்.

பப்பாளி பழத்தில் அதிக அளவு விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் ஊட்டச்சத்துக்கள்  அடங்கியுள்ளன. இது அனைவரும் உண்ணும் பழம் ஆகும்.

பப்பாளி பழத்தை தொடர்ந்து உண்ணுவந்தால் மலச்சிக்கல் குணமாகும். பப்பாளி பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வரும்போது நமது சீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் சருமத்தின் நிறத்திற்கு மற்றும் வடிவத்திற்கு உதவுகிறது. முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.

பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது. எனவே இதனால் நாம் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது  தவிர்க்கப்படுகிறது. நொறுக்கு தீனியை விட மிகவும் விலை குறைவு.

பப்பாளி பழத்தில் கரோட்டீனாய்டுகள், பிலேவனாயிடுகள், வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதனால் நமது நோய்  எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். பப்பாளி வயிற்று பொருமலை ஏற்படாமல் தடுக்கும்.

பப்பாளிபழத்தில் கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் ஏ உள்ளது. இவை கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் பழத்தை கண் மற்றும் சருமத்தின் மேல் பற்றுபொடுவதால் சருமம் பொலிவோடு காணப்படும்.

மேலும் படிக்க : இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் எலும்பு தேய்மானம் அடைந்து அவதிப்படுபவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள்  எலும்புகளில் ஏற்படும் அழற்சியை போக்க வல்லது. 

மேலும் படிக்க : கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

பப்பாளி பழம் அனைத்து பகுதிகளிலும் விலையகூடிய ஒன்றாகும். இதை நம் தோட்டத்திலேயே விளைவித்து பயனடையலாம்.

மேலும் படிக்க : நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, தோல்நோய் போன்றவற்றிக்கு எளிதில் கிடைக்கும் இந்த பழம் அருமருந்தாகும்!

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleசூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி
Next articleகொடுத்த வாக்குறுதியில் உறுதியாக இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ்! ஆளுங்கட்சியினர் பெருமிதம்! எதிர்கட்சியினருக்கு ஏமாற்றம்