இது என்னடா டோரா புஜ்ஜிக்கு அக்கா மாரி இருக்கு! பாவம் குவாரண்டின்ல என்னமோ ஆயிடுச்சி போல! பிக் பாஸ் ஷெரினின் நியூ கெட்டப்!

0
71

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை  ஷெரினின்  நியூ பாப் கட் ஹேர் ஸ்டைல் கெட்டப்பில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள், இது என்னடா டோரா புஜ்ஜிக்கு அக்கா மாரி இருக்கு.. பாவம் குவாரண்டின்ல என்னமோ ஆயிடுச்சி போல.. என்றும் பார்பி போல இருக்கிறீங்க என்றும் கமெண்டுகளை தெறிக்க விடுகின்றனர்.

பிக்பாஸ் ஷெரின் சினிமாவில் முதன் முதலாக துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

அதன்பின் விசில் படத்தின் மூலம் இவரது வித்தியாசமான நடிப்பினால் ரசிகர்களின் கனவுக்கன்னி ஆகினார். அந்தப் படத்தில் இடம் பெறும் “அழகிய அசுரா..” பாடலுக்கு இவர் காட்டிய எக்ஸ்பிரஸ்சனுக்கு இன்னைக்கு மயங்காத ஆள் இல்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை மாடலான தர்ஷன் உடன் செரின் நெருங்கிப் பழகியதால், கிசுகிசுவுக்கு ஆளாக்கினார். அதன்பின் அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று விளக்கம் அளித்தனர்.தற்போது இவர் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வபோது பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தி வருகிறார்.