விரைவில் OTT தளத்தில்  3 மொழிகளில் வெளியாகவிருக்கும் யோகி பாபுவின் படம்!

0
241

சென்ற ஆண்டு நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்த வெளியான ‘தர்மபிரபு’ படமானது வித்தியாசமான கதைக்களத்தில்  ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. தற்போது இந்தப்படத்தின் ரீமேக் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மொழிகளில் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

‘தர்மபிரபு’ படத்தினை  தமிழில் தயாரித்த  தயாரிப்பாளர் P ரங்கநாதனின்  ஸ்ரீவாரி பிலிம் நிறுவனம் மூன்று மொழிகளிலும்  ரீமிக்ஸ் செய்ய உள்ளது.

தெலுங்கில் அட்ஷத் என்பவர் இந்த படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளனர் .மலையாளத்தில் வசனம் பாடல்களை நிஷாத் எழுதியுள்ளார். அதேபோல் கன்னடத்தில் வசனங்களுடன் பாடல்களையும் உமா எழுதியுள்ளார். 

இந்த படத்தில் எமனாக யோகிபாபு  நடிக்க , எமனின் அப்பாவாக ராஜேந்திர பிரசாத் , சித்திரகுப்தனாக கருணாகரன்,சிவனாக பிரம்மானந்தம் என நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்? என்ற ஆர்வத்துடன் திரையுலக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Previous articleதன்னுடைய குடும்பம்தான் முக்கியம் ஐபிஎல் இல்லை
Next article#Breakingnews: அரியர்ஸ் தேர்ச்சிக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் பொய்யானது:! கே.பி. அன்பழகன் விளக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here