#Breakingnews: அரியர்ஸ் தேர்ச்சிக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் பொய்யானது:! கே.பி. அன்பழகன் விளக்கம்!

0
67

#Breakingnews: அரியர்ஸ் தேர்ச்சிக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் பொய்யானது:! கே.பி. அன்பழகன் விளக்கம்!

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.ஆனால் அரியர்ஸ் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததை AICTE மறுப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியதாக,அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் தகவல் ஒன்று வெளியானது.

ஆனால் அதுபோன்ற எந்த எதிர்ப்பும் ஏஐசிடிஇ-யிடமிருந்து தெரிவிக்கப்படவில்லை என்றும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தை எதிர்த்து எனக்கு எந்தவிதமான மின்னஞ்சலும், வரவில்லை என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தனது கருத்தை ஏஐசிடிஇ, கூறியதாக செய்தி பரப்பி வருகின்றார் என்றும்,அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தற்கு ஏஐசிடிஇ சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வெளியான தகவல் தவறானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

author avatar
Pavithra