கிரிக்கெட் பேட்டால் உயிரிழந்த 13 வயது சிறுவன்! சேலத்தில் பரபரப்பு!

0
133

கிரிக்கெட் பேட்டால் உயிரிழந்த 13 வயது சிறுவன்! சேலத்தில் பரபரப்பு!

கிரிக்கெட் பேட் நழுவி நெஞ்சில் பட்டதனால் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் புதூர் அருணாசலம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் தீபக்.

13 வயது நிரம்பிய சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

கொரோனாவால் 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் உள்ள காலி நிலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து தீபக் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளான்.

தீபக் பந்துவீச தீபக்கின் நண்பன் பேட்டிங் செய்து உள்ளான்.

எதிரே பேட்டிங் செய்த சிறுவனின் கையில் இருந்த பேட் நழுவி பற‌ந்து வந்த பேட் தீபக்கின் நெஞ்சின்மேல் பட்டுள்ளது.

இதில் காயமடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உள்ளான்.

உடனடியாக தீபக்கின் பெற்றோர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பெற்று வந்த தீபக் நேற்று காலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளான். கிரிக்கெட் பேட்டால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள மக்களுக்கு ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது எனவே கூறலாம்.

 

 

 

Previous articleமீண்டும் மும்பையில் நிலநடுக்கம் : அதிர்ச்சியில் மக்கள் !!
Next articleகோவையில் வீடு இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு!!