மத்திய பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்திலுள்ள குர்ஜர்பாடா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை, நேற்று மளிகை பொருட்களை வாங்க கடைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர், சிறுமியை தேடத் தொடங்கினர். இருப்பினும் சிறுமி கிடைக்காததையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் பெயரில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், சிறுமி அருகில் உள்ள ஒரு வயலில் சடலமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர். சிறுமியின் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தனது விசாரணையை தீவிரப்படுத்தி, அங்கு சந்தேகத்திற்கிடங்க சுற்றி திரிந்த 3 உள்ளூர் இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது மூவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து குளத்தில் மூழ்கடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இவர்கள் மூவரையும் போஸ்கோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்து, தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.