ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான் பலமானது

0
214
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளது. 2016-ம் ஆண்டு நாங்கள் சிறப்பாக விளையாடினோம். நினைவில் நிற்கும் சீசனாக அது அமைந்தது. அப்போது இருந்த அணிபோல் தற்போதைய அணி இருக்கிறது. நான் மிகவும் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்நோக்கி இருக்கிறேன். என்று  விராட் கோலி கூறியுள்ளார்.
ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல் போட்டியில் 2 முறை 2-வது இடத்தை பிடித்தது. 2009-ம் ஆண்டும், 2016-ம் ஆண்டும் அந்த அணி இறுதி போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது.
கடைசியாக விளையாடிய 3 ஐ.பி.எல்.லிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆட்டம் மோசமாக இருந்தது. 2017 மற்றும் 2019-ல் கடைசி இடமான 8-வது இடத்தையும், 2018-ல் 6-வது இடத்தையும் பிடித்து இருந்தது. தற்போது உள்ள ஆர்.சி.பி. அணியில் கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, கிறிஸ் மோரிஸ், ஸ்டெய்ன், இஸ்ரு உதானா, சாஹல், ஆடம் ஜம்பா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள்.
Previous articleநான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்!
Next articleபிரபல தமிழ் பட வில்லன் திடீர் மரணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here