பிறந்த 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் :!

0
180

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி செல்லும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறுகிறது.

அவ்வாறு சாலையில் வீசப்படும் குழந்தைகளை சமூக ஆர்வலர்கள் மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் குழந்தைகள் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. இது குறித்து பல்வேறு விசாரணையில் காவல்துறையினரிடம் புகார்கள் அதிக அளவில் இன்னும் நிலுவையில் உள்ளது .

இந்நிலையில் சங்கரன்கோவில் பகுதியில் பிறந்த நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று எரியும் தீயில் கொடூரமாக கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியாருக்கு சொந்தமான தியேட்டர் வளாகத்தில் நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தை எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த போலீசார் தீயில் எரிந்த நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டனர்.அப்போது அக்குழந்தை பிறந்த நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் யார் ?என்றும் குழந்தை எரித்துக் கொன்றது யார்? என்று பல தரப்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் குழந்தையை அழிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Previous article5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
Next articleலடாக் பகுதியில் சீன அத்துமீறல் : இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் சீனா ராணுவம் குவிப்பு :?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here