போதை கடத்தல் விவகாரத்தில் கைதான சஞ்சனா கல்ராணியின் ரகசிய திருமணம் அம்பலம்!

Photo of author

By Parthipan K

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் முன்னணி நடிகைகளான சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி சில நாட்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலை சஞ்சனா  கல்ராணிக்கு டாக்டர் அஜீஸ் பாஷா என்பவருடன் ரகசியமாக திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது.

ஆனால் இதைப்பற்றி சஞ்சனா கல்ராணி இடம் போலீசார் விசாரணை நடத்தியபோது டாக்டருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்துள்ளார்.

சஞ்சனா கல்ராணி யின் தாயார் ரேஷ்மா கல்ராணி கூறியதாவது: டாக்டர் அஜீஸ் பாஷாவிற்கும் தனது மகள் சஞ்சனா கல்ராணி மூன்று வருடங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் கொரோனாவால் தள்ளி போனதாக தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் போலீசார் கடத்தல் விவகாரத்திற்கும் டாக்டருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை துவக்கி உள்ளனர்.