“எல்லாம் வேஷம்! வெறும் வெற்று கோஷம்” திமுக பகுத்தறிவு பல்லிளிக்கிறதா ?

0
240

சில நாட்களுக்கு முன்பு திராவிடம் பேசும் கி.வீரமணி அவர்கள் அத்திவரதர் எந்திரித்து நிற்க முடியுமா என்று கேலியும் கிண்டலும் செய்து விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பல பேர் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பிஜேபி சேர்ந்த நாராயணன் வீரமணி விமர்சித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அதாவது, பகுத்தறிவு பேசும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மகனின் திருமணம் 35 ஆண்டுகளுக்கு முன் விநாயகர் கோவிலில் நடந்ததாக பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி அதிர்ச்சி செய்தியை பதிவிட்டுள்ளார்.

இது குறித்த நாராயணசாமி திருப்பதி முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது யாதெனில், ”திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் மகனும், மருமகளும் அத்திவரதர் தரிசனத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது என்ற என் பதிவினையடுத்து, சமூக வலைதளங்களில் அதை மறுத்து வருகிறார்கள் பகுத்தறிவு பகலவன்கள்(?).
சரி, இதோ இதையும் மறுப்பீர்களா? சுமார் 35 வருடங்களுக்கு முன், கி.வீரமணியின் மகன் அன்புராஜ் அவர்களுக்கு கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தின் எதிரில் உள்ள ‘வினை தீர்த்த விநாயகர் கோவிலில்’ திருமணம் நடந்ததை மறுக்க முடியுமா?

அதன் பின் அந்த திருமணத்தை அதே சார்பதிவாளர் அலுவலகத்தில், வினை தீர்த்த விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றதாக பதிவு செய்ததை மறுக்க முடியுமா?

அதற்கு உதவி புரிந்தது தியாகராய நகரை சேர்ந்த இரு பிராமணர்கள் என்பதை மறுக்க முடியுமா? அதில் ஒருவர் தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ள என் நண்பர் வேதசுப்ரமணியம் என்பதை மறுக்க முடியுமா? அந்த திருமணத்திற்கு தலைமை தாங்கியது, என் நண்பரும், முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் தான் என்பதை மறுக்க முடியுமா? வினை தீர்த்த விநாயகரின் அருள் பெற்று வாழ்க்கையில் இணைந்த அந்த தம்பதியினர் தான் இன்று கி.வீரமணிக்கு பக்க பலம் என்பதை மறுக்க முடியுமா?

அத்திவரதர் எழுந்து நடப்பாரா என்று கேட்ட கி.வீரமணி குணமடைந்து எழுந்து நடப்பதற்கு அத்திவரதரின் ஆசி பெற வினை தீர்த்த விநாயகரின் அருள் பெற்ற தம்பதியினர் சென்றிருந்தாலும் தவறில்லை. அவர்களின் பக்தி கி.வீரமணி அவர்களை நலமடைய செய்யும்.
எல்லாம் வேஷம்! வெறும் வெற்று கோஷம்” என அவர் தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பகுத்தறிவு பேசும் திராவிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பலர் தங்களின் குடும்பத்தினர் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு சலுகை வேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியது அனைவரும் அறிந்ததே.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleஅவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்
Next articleஇவர் நினைத்தால் திமுக பஸ்பம் ! மோடி இஸ் ஹவர் டாடி! அமைச்சர் பேச்சு!