சிவப்பு ரோஜாக்கள் பகுதி 2 படப்பிடிப்பு துவங்குமா? ஹீரோ கதாபாத்திரம் யாருக்கு ?

0
190

இயக்குனர் பாரதிராஜா  70 களில்  இயக்கிய ஒரு சைக்கோ கில்லர் திரைப்படம் தான் சிவப்பு ரோஜாக்கள்.  அப்போது இந்த படத்தில்  நடிகர்  கமல்ஹாசன் மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்தார்.  இத்திரைப்படம் மக்கள் மத்தியில் இன்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது, அதுவே  இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

தற்போது சிவப்பு ரோஜாக்கள் பகுதி இரண்டை இயக்குனர் பாரதிராஜாவின் மகன்  நடிகர் மனோஜ்  இயக்கப் போகிறார்.   மனோஜ் இந்த திரைப்படத்தை இயக்கப்போவதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இத்திரைப்படத்தின் ஸ்கிரிப்டை மனோஜ் உடன்  இணைந்து இயக்குனர் ராமு தீவிரமாக தயார் செய்து  வருகின்றார். 

மேலும் இத்திரைப்படத்திற்கு கதாநாயகனாக நடிகர் சிம்புவை தேர்ந்தெடுத்துள்ளனர். ஏனெனில் ஏற்கனவே நடிகர் சிம்பு மன்மதன் திரைப்படத்தில் ஒரு சைக்கோ கில்லராக நடித்திருந்தார் என்பதால் கூட இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரம் கூறி வருகிறது. 

இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த சிகப்பு ரோஜாக்கள் பகுதி 2 திரைப்படம் நல்ல வசூலையும் மக்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெரும் என்று படக்குழுவினர்  நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மனோஜ் திரைப்படத்தை இயக்க அதிக ஆர்வம் காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவப்பு ரோஜாக்கள் பகுதி 2 படப்பிடிப்பு துவங்குமா? ஹீரோ கதாபாத்திரம் யாருக்கு ?

Previous articleவடிவேல் பாலாஜியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!
Next articleகாஞ்சிபுரத்தில் அ.தி.மு.க பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here