மின்கட்டணத்தை ஒரு நிமிடத்தில் செலுத்த மத்திய அரசின் புதிய முயற்சி !!

0
127

மக்கள் தற்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பயன்படுத்த தொடங்கி விட்ட நிலையில், மத்திய அரசு அதனை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை தளமான Paytm மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு ஒரே நிமிடத்தில் ஆன்லைன் மூலமாக மின்சார கட்டணத்தை செலுத்தும் வசதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த சேவை தளம் மூலம் மின்சார கட்டணம் உள்ளிட்ட குடிநீர், கிரெடிட் கார்டு, எரிவாய்வு சிலிண்டர் இணைப்பு ,கேபிள் டிவி கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு நிமிடத்தில் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பேடிஎம்(Paytm) பயன்பாட்டில் நுழைந்த கட்டண ரீச்சார்ஜ் மற்றும் கட்டண பில்களை தேர்வு செய்து ,பவர்(Power) என்பதை தேர்ந்தெடுத்து மாநில வாரியம் அல்லது ஆபரேட்பெயர் போன்ற அடிப்படை தகவல்களை நிரப்பி வைக்க வேண்டும்.

இதனை பேடியம் யுபிஐ(Paytm UPI), பெட்டியம் வாலட் கார்ட்(Paytm Wallet) மற்றும் நெட் பேங்க்(Net banking) போன்ற விருப்பமான கட்டண முறையை பயன்படுத்தியும் இதனை செய்ய முடியும். நகரங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ டிக்கெட் , செல்லான், டிஜிட்டல் தங்கம், கிரெடிட் கார்டு, கடன்கள் காப்பீடு உள்ளிட்ட நிதி சேவையும் பயன்படுத்த இயலும்.

Previous article13 வயது சிறுமியை 2.70 லட்சத்திற்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது காமக்கொடூரன்!
Next articleபிரபல இயக்குனருடன் ஜோடி சேரும் அமலா பால்! அந்த இயக்குனர் யார்?