மதுரையில் 19 வயது சிறுமி தற்கொலை:! நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டாரா?

0
129

மதுரையில் 19 வயது சிறுமி தற்கொலை:! நீட் தேர்வு பயத்தால் தற்கொலை
செய்துக்கொண்டாரா?

நாளை நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில்,நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்.

மதுரையில் ஜோதி துர்க்கா என்னும் மாணவி நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.இந்நிலையில் திடீரென்று அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
துர்காவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், துர்காவின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீட் தேர்வு நாளை நடைபெறவிருக்கும் நிலையில்,நீட் தேர்வுக்கு தயாராகிக் வந்த அந்த மாணவி திடீரென்று தற்கொலை செய்திருப்பது,பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீட் தேர்வு பயத்தால் இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleரயில் பயணிகள் டிக்கெட்டுகளை இப்படி பதிவுச் செய்தால் 20% சலுகை:! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
Next articleதல படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தங்கையாக மாறும் பிரபல நடிகை யார் தெரியுமா !