இரட்டைத்தள பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோ!!

0
100

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள இரட்டைத்தள பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம் செல்ல மிகவும் முக்கியமான போக்குவரத்து வசதியாக செயல்படுவது மண்டபம் மற்றும் பாம்பன் இடையே அமைந்திருக்கும் பாலம் தான். தற்போது உள்ள பாலத்திற்கு அருகில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை தளம் கொண்ட புதிய பாலம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடலின் நடுவே தூண்கள் அமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிதாக அமையவுள்ள இரட்டைத்தள பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/PiyushGoyal/status/1305056860119035905?s=20

இந்த வீடியோவில் புதிதாக கட்டப்படும் பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதை திறப்பதற்கு பதிலாக மேலே தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.