தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி!

0
75

தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி!

நீட் தேர்வு எழுத சொல்லும்பொழுது நகைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன புதுப்பெண் தனது தாலியையும் மெட்டியையும் கழட்டிக் கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 17,990 மாணவர்கள் நீட் தேர்வு இன்று எழுதுகின்றனர். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.

மாணவ மாணவிகளை மெட்டல் டிடெக்டர் வைத்து போலீசார் பரிசோதனை செய்து வருகின்றனர். அனைத்து கடும் சோதனைக்கு பிறகே மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர்.

ஆறு மணி நேரம் உள்ளே இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் கொடுக்க முன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் நகைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் பெற்றோர்கள் மற்றும் உடன் வந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டுத்தான் உள்ளே செல்கின்றனர்.

எந்த பெண்களும் யோசித்துப் பார்க்க முடியாத ஒரு காரியத்தை ஒரு பெண் செய்துள்ளார். அதையும் இந்த நீட் தேர்வு செய்ய வைத்துள்ளது என்றே கூறலாம்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலட்சுமி. இவர் நீட் தேர்வு எழுதுவதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேர்வு மையத்திற்கு வந்துள்ளார்.

முத்துலட்சுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். அதேபோல் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இன்று நீட் தேர்வு எழுத வந்த அவர் தனது கழுத்தில் இருந்த தாலி மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றி கணவரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார்.

பொதுவாக பெண்கள் தனது கழுத்தில் இருக்கும் தாலியை கழற்ற யோசிப்பார்கள். அதை பெரும் அமங்கலமாக நினைப்பார்கள். ஆனால் அனைத்தையும் செய்ய வைத்துவிட்டது இந்த நீட் தேர்வு. இந்த மாதிரியான செயல் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.