இன்றைய ராசி பலன்- 15-09-2020
நாள் : 15-09-2020
தமிழ் மாதம்:
ஆவணி 30, செவ்வாய்க்கிழமை.
நல்ல நேரம்:
காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.
இராகு காலம்:
மதியம் 3.00 முதல் 4.30 வரை.
எம கண்டம்:
காலை 9.00 முதல் 10.30 வரை.
குளிகன்:
மதியம் 12.00 முதல் 1.30 வரை,
திதி:
திரியோதசி திதி இரவு 11.00 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.
நட்சத்திரம்:
ஆயில்யம் நட்சத்திரம் பகல் 02.25 வரை பின்பு மகம்.
நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. பிரதோஷம். முருக- நவ கிரக வழிபாடு நல்லது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் இந்த விஷயத்திலும் லாபம் காண்பீர்கள். ஒருசிலர் பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை அடைவார்கள். பொருளாதார மற்றும் பண ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு தேவையில்லாத நபர்களை நம்பாமல் இருப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளின் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களின் எதிர்காலம் குறித்த பயமும், அவநம்பிக்கையும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதைப் பற்றிய கவலையும் கொள்ளாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களினால் வெளி வட்டார நட்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் தடையின்றி கைகூடிவரும். பிள்ளைகள் மூலம் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறக் கூடும். பெற்றோர்கள் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். பொருளாதார ரீதியில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
துலாம்
துலா ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நடைபெறக்கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் நெகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இதுவரை இழுபறியில் இருந்து இவைகள் தடையின்றி வசூலாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் குறையும். லாபம் அதிகரித்து பொருளாதார நிலை உயரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே இன்று நீங்கள் தொழில் வியாபாரத்தில் தேக்க நிலையை எதிர் கொள்ள நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 02.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகள் மதியத்திற்கு பிறகு வெற்றி தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். எனவே பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் பாராட்டுக்கள். கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டிய அமைப்பாக இருக்கிறது. பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கடன் தொகைகள் வசூலாகாத சூழ்நிலையில் தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் பொறுமையாக பேசுவது நல்லது. உத்தியோகத்தில் ஒருசிலருக்கு ஊதிய உயர்வு உண்டு.