இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்!இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
204

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது மாஸ்டர் படப்பிடிப்பை முடித்து விட்டு அதற்கான ரிலீஸ்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக நேற்று தெரிவித்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம்,கைதி படங்கள் பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. மேலும் இவரியக்கிய மாஸ்டர் படத்திற்காக விஜய் ரசிகர்கள் தவமாய் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம்.

ஏப்ரல் மாதத்தில் வெளியிட இருந்த இப்படம் கொரோனா பேரிடர் காரணமாக இன்று வரை திரையிட படாமலேயே உள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க நடிகர் கமலின் ரசிகர்கள் இந்த டுவீட்டுக்கு ‘என்னவென்று நினைத்தாய்’ என்ற ஹாஷ்டாக்கை  ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்!இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!நடிகர் கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் இணைய உள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இன்று வெளியாக உள்ள தகவலுக்காக அனைத்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Previous article4 சொட்டு நல்லெண்ணையை உங்க சிறுநீரில் விடுங்கள்! நொடியில் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம்!
Next articleகிரீன் டீ Vs பிளாக் காபி- இதுல எது உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவுதுனு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here