ஏடிஎம்-இல் ரூ.10,000க்கு மேல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு.. SBI அறிவிப்பு!!

0
110

எஸ்பிஐ ஏடிஎம்-மில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI), நாட்டிலுள்ள அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்-களிலும் நாள் முழுவதும் OTP அடிப்படையில் பணத்தை எடுக்கும் புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் 18, 2020 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரூ. 10,000 மற்றும் அதற்கு மேல் பணத்தை ஏடிஎம்-மில் இருந்து எடுக்க வேண்டும் என்றால், வாடிக்கையாளர் வங்கியில் பதிவு செய்த தொலைபேசி எண்ணிக்கு OTP அனுப்பப்படும். அதனை ஏடிஎம் மெஷினில் டெபிட் கார்டு PIN உடன் உள்ளீடு செய்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-களில் மட்டுமே இந்த முறை அமல்படுத்தப்பட இருக்கிறது. இதுவே எஸ்பிஐ கார்டு கொண்டு வேறு வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் OTP தேவையில்லை.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த OTP வசதியை நாள் முழுவதும் செயல்படுத்தினால், எஸ்பிஐ டெபிட் கார்டுதாரர்கள் மோசடி செய்பவர்கள், அங்கீகரிக்கப்படாத பணமதிப்பிழப்பு, அட்டை சறுக்குதல், அட்டை குளோனிங் போன்ற அபாயங்களில் இருந்து தடுக்க முடியும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு என்றும் தெரிவித்துள்ளது.

Previous articleஒரு வாரம் இரவு தூங்கும் முன் நீரில் உப்பு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Next articleபுரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?