இந்தியாவில் புதிதாக 97,894 பேருக்கு கொரோனா; 1,132 பேர் உயிரிழப்பு!

0
190

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,18,254 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,132 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 40,25,080 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இன்றைய தேதியில் 10,09,976 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,36,613 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 6,05,65,728 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleதிமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக பொன். ராதாகிருஷ்ணன்!
Next articleமுழு கட்டணம் வசூல்; 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்..! அமைச்சர் செங்கோட்டையன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here