உத்திரப்பிரதேச மாநிலத்தில் தவாலி கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவறி கிராமத்தில் பசித்தும் பெண்கள் வசித்துவரும் பெண்ணொருவர் முர்ஷிதா.
கடந்த 15ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கணவரும், மாமியாரும் வரதட்சணைக்காக கார் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை வீட்டில் இருந்து கொண்டு வருமாறு அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
திருமணமாகி ஏழு வருடமாகியும் தினம் தினம் கணவரும் மாமியாரும் கொடுமை செய்து வந்துள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை என்று மாமியாரும் கணவனும் ஒரு அறையில் பூட்டி வைத்த உணவு வழங்காமல் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இதனை தந்தையிடம் தொலைபேசி மூலமாக அந்த பெண் கூறியுள்ளார்.அப்பெண்ணின் தந்தை விரைந்து வந்து மகளை மயங்கிய நிலையில் மீட்டு அந்தப் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.ஆனால் அந்தப் பெண்ணோ கருசிதைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பெண்ணின் தந்தை தன் மகளை கணவன் மற்றும் மாமியார் அடித்துக் கொன்றதாக, ஷாபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், இறந்ததற்கான சரியான காரணத்தை தெரிந்த பின்னரே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.