நம் உடலில் உள்ள நச்சுக்களை மற்றும் கழிவுகளை வெளியேற்றும் பங்கு கல்லீரலுக்கு மிக அதிகமாக உள்ளது. நாகரீக காலத்தில் தேவையற்ற உணவுப் பழக்கங்களால் கல்லீரலில் வீக்கம்,கல் ஆகியவை வந்துவிடுகிறது. இதனை சரி செய்ய கூடிய இயற்கை முறையில் நாம் இங்கு பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்:
1. சுரக்காய் கால் துண்டு
2. கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி அளவு.
3. எலுமிச்சை பழ ஜூஸ் அரை ஸ்பூன்
4. கால் சிட்டிகை மஞ்சள்
5. தேவையான அளவு உப்பு.
செய்முறை:
1. சுரைக்காயை எடுத்து தோல் நீக்கி விட்டு அதில் ஒரு பிடி அளவு கொத்தமல்லி போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் எடுத்துக் கொள்ளவும்.
2. அதனை வடிகட்டி அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
3. பின் அதில் அரை எலுமிச்சைபழ ஜூஸை பிழிந்து விடவும்.
4. கால் சிட்டிகை மஞ்சள் போடவும்.
5. தேவையான அளவு உப்பை போடவும்.
அனைத்தையும் நன்றாக கலக்கி கொள்ளவும். நீங்கள் இதை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பதில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
இவ்வாறு தொடர்ந்து நீங்கள் மூன்று நாட்கள் வரை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் கல் மற்றும் கொழுப்புகள் கரைந்து வெளியேறிவிடும்.
சைனஸ் பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு பிடி காய்ந்த திராட்சையை எடுத்து சூடான தண்ணீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலையில் அந்தத் தண்ணீரோடு திராட்சையும் மென்று சாப்பிட்டு வந்தால் கல்லீரல் விரைவாக சுத்தமடைந்து குணமடைந்து விடும்.