சேலம் – சென்னை நெடுச்சாலை திட்டத்தை கைவிட்டு இருக்கும் மூன்று சாலைகளை வரிவாக்க கோரிக்கை

0
141

சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட்டு, ஏற்கனவே அமைந்திருக்கும் சேலம்-சென்னை இடையே இருக்கும் மூன்று தொழிற்சாலைகளை அகலப்படுத்த நாடாளுமன்றத்தில் கோரிக்கை வடுக்கப்பட்டுள்ளது.

சேலம்-சென்னை இடையே அமைக்கப்படும் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே அமைந்திருக்கும் மூன்று நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி பயன்படுத்தக் கோரி நாடாளுமன்றத்தில் 377 -வது விதியின் கீழ், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர்.கெளதமசிகாமணி வலியுறுத்தியுள்ளார்.

தற்பொழுது அமைக்கப்படும் சேலம்-சென்னை எட்டு வழி சாலையில் ஆயிரக்கணக்கான மக்களின் நிலங்களும், வாழ்வாதாரங்களை அழித்தும், நீர் நிலைகளை அகற்றியும் ,மலைகளை குடைந்தும், மரங்களை அழித்தும் ,காடுகளை விலங்குகளின் வாழ்வாதாரங்களை அழித்தும், இயற்கைக்கு எதிராக அமைக்கப்படுவதற்கு பதிலாக,ஏற்கனவே இருக்கும் மூன்று நெடுஞ்சாலைகளை அகலப்படுத்த நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

NH-48, NH-2 ஆகிய சாலைகள், சென்னை காஞ்சிபுரம் ,கிருஷ்ணகிரி தர்மபுரி, ஆகிய வழியாக சேலத்திற்கு சுமார் 352.7 கிலோ மீட்டர் நீளத்தில் அமைதிருக்கும் நான்கு வழி சாலையை 6 வழிச் சாலையாக மாற்றவும், NH – 48 மற்றும் SH-18 ஆகிய சாலைகளை 331.89 கிலோமீட்டர் இருவழி சாலைகளை நான்கு வழி சாலையாக மாற்றவும், NH – 32 பதையை சென்னை,விழுப்புரம் வழியாக இருக்கும் 334.28 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்திருக்கும் இரண்டு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கொரோனா காலத்தில் மக்கள் பெரும் அவதியடைந்து பொருளாதாரத்தை இழந்து வரும் நிலையில் ,எட்டு வழி சாலைக்காக மாற்றுவதற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, விரைய செலவாகும் என்றும் சாலைகளை மாற்ற பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை பாதுகாக்கவும் ,இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் விடுத்துள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்தில் சேலம் ,தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மக்கள் விவசாயிகளின் நிளத்தை அழிப்பதற்கு பதிலாக ஏற்கனவே இருக்கும் மூன்று சாலைகளை விரிவாக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், எட்டு வழிச் சாலைகளை திட்டத்தை கைவிட வேண்டும் என்று போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் போன் கௌதமசிகாமணி நாடாளுமன்றத்தில் 377-வது விதியின் கீழ் வலியுறுத்தியிருந்தார்.

Previous articleஅதிரடியாக எட்டு எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்த மாநிலங்களவை தலைவர் நாயுடு!
Next articleமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி கொடுமை செய்த மர்ம கும்பல் !! காவல்துறையினர் விசாரணை