300க்கு மேற்பட்ட யானைகள் பலி!விஷ நீரை பருகியதால் பரிதாபம்!

Photo of author

By Kowsalya

300க்கு மேற்பட்ட யானைகள் பலி!விஷ நீரை பருகியதால் பரிதாபம்!

தென் ஆப்பிரிக்காவின் நாட்டில் போட்ஸ்வானாவில் விஷம் கலந்த நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் பலியான சம்பவம் அங்கு உள்ள மக்களை அதிர செய்துள்ளது.

போட்ஸ்வானா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்களின் துணை இயக்குநர் சிரில் தாவோலோ, விஷம் உண்டான நீரைப் பருகியதால் 330 யானைகள் பலியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நீரில் மற்றும் சில நேரங்களில் மண்ணில் காணப்படும் நுண்ணிய உயிரினங்கள் சயனோ பாக்டீரியாக்கள் எனப்படுகின்றன. பொதுவாக இந்த சயனோபாக்டீரியாக்கள் அனைத்தும் நஞ்சுகளை உற்பத்தி செய்வதில்லை. ஆனால் காலநிலை மாற்றம் உலகளாவிய வெப்பநிலையை அதிகரித்து வருவதால் நஞ்சுகள் உருவாவது அடிக்கடி நிகழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் யானைகள் மட்டும் ஏன் பாதிக்கப்பட்டன என்பது குறித்தும் பிற விலங்குகள் எவ்வாறு தப்பிப் பிழைத்தன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாத தொடக்கத்தில் முதலில் பதிவாகத் தொடங்கிய யானைகளின் இறப்புகள் ஜூலை மாதம் 330 ஆக உயர்ந்துள்ளது. எனினும் போட்ஸ்வானாவின் வனவிலங்குகள் இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்பதற்கு எந்த ஐயமும் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்