தமிழகத்தில் வெப்பச்சலனம் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!

0
200

தமிழகத்தில் நிலவி வரும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,விழுப்புரம், செங்கல்பட்டு ,கடலூர் ,ஆகிய மாவட்டங்களிலும் , தருமபுரி சேலம் ஆகிய மாவட்டங்களிலும், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை மண்டலத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகபட்சமாக வெப்பநிலை 36 டிகிரி முதல் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 ஆக பதிவாக கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை பகுதியை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் வேகத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் அல்லது அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் : சென்னையில் மாணவர்கள் போராட்டம்
Next articleகும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா பாதிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here