உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கடந்த மூன்று ஆண்டுகளாக விலை விஜய் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட்டாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் வரும் அக்டோபர் நான்காம் தேதி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களை தனிமைப்படுத்தி சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசனில் அதிக அளவு அடல்ட்களை களமிறக்கியுள்ளது பிக் பாஸ்.
இதுவரை தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களான ரியோ ராஜ், அனுமோகன், ஜித்தன் ரமேஷ், ஷிவானி நாராயணன், சனம் செட்டி, கேப்ரில்லா, ரம்யா பாண்டியன் ஆகியோரின் பேர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
தற்போது நடிகை அபிநயஸ்ரீ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே சிவானி, ரம்யா பாண்டியன், சனம் செட்டி, கேப்ரில்லா போன்ற கவர்ச்சி நடிகைகளின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும் பொழுது மீண்டும் மற்றொரு கவர்ச்சி நடிகை பிக்பாஸ் வீட்டில் உள்ளே போகிறார் என்ற செய்தியைக் கேட்டதும் ரசிகர்கள் குத்தாட்டம் போடுகின்றனர்.
சில ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் “இது என்ன பிக்பாஸ் இடமில்லை வீடா அடல்ட் ஒன்லி வீடா?” என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.