பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் அறிவிப்பு தேதியை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன் !!

0
151

கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கடந்த மூன்று மாதமாக பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்து வந்த சூழலில் அண்மையில் மத்திய அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அதில் 10,11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று குறிப்பிடப்பட்டது.இதன் அடிப்படையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதன் பின்னர் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் வரலாம் என்று தெரிவித்திருந்தது ஆனாலும் முழுமையான எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் இன்று கோபி அருகே நம்பியூரில் 26 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.இதன் பின்னர் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பள்ளிகள் திறப்பு குறித்து நாளை மறுநாள் தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று கூறினார்.

Previous articleஇந்தியாவில் ஒரே நாளில் 93,167 பேர் பாதிப்பு: 1,124 பேர் உயிரிழப்பு!
Next articleபெரியார் சிலை அவமதிப்பு குறித்து துணை முதல்வர் கண்டனம் :!