கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே உருவானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவரான ஜெனரல் டாக்டர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று , உலக சுகாதார அமைப்பு தலைவரான ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் என்பவர், கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று என்ற கருத்தினை முன் வைத்தார்.
மேலும், WHO அறிவியல் மற்றும் சான்றுகளை உலக சுகாதார அமைப்பு நம்புவதாகவும், அதனால் யாரோ ஒருவர் சொன்னது போல கொரோனா நோயானது வேண்டுமென பரப்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதாரத்தை பொறுத்தவரை, இதுவரை வந்த அனைத்து வெளியீடுகளும், வைரஸ் இயற்கையாகவே தோன்றியது என்பதனை WHO நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த நோயானது முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்றும் அவை தோன்றிய விலங்குகளிடமிருந்து அதை மனிதர்களுக்கு பரப்பியதை குறித்து அடையாளம் காண குறிப்பிட்ட நேரம் மற்றும் மிகவும் விரிவான விசாரணைகள் தேவைப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு திட்டம் கொரோனா நடவடிக்கையின்போது கூறியிருந்தது.
மேலும் கொரோனா நோய் தோன்றிய விலங்கு மற்றும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு எப்படி பரவியது என தெரியவில்லை, என்றால் அது மீண்டும் மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று மரியா வான் கெர்தோவ் கூறியுள்ளார்.