வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது புகார் !!

Photo of author

By Parthipan K

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு , மேற்பார்வையாளர் பாலியல் தொல்லை கொடுத்ததினால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வ உ சி பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.அந்த அலுவலகத்தில் பணிபுரியும் தூத்துக்குடியை சேர்ந்த ஜெயா என்பவர் உதவி அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர்களுக்கு அலுவலக மேற்பார்வையினரான முருகனுக்கு , எதிராக நேற்று இரவு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அந்தப் பெண் கூறுகையில், மேற்பார்வையாளர் முருகன் என்பவர் பணி செய்ய விடாமல் தினமும் தொந்தரவு செய்து வருவதாகவும் ,கடந்த 7 ஆண்டுகளாக இந்தத் தொந்தரவு நீடித்து வருவதாகவும் ஜெயா தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக மற்ற ஊழியர்களிடம் பேசுவதையும் தடுத்த முயன்றதாகவும் ,இதோடு மட்டுமல்லாமல் வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாகவும், அந்த பெண் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக புகார் கொடுத்தும் ,நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் ,தர்ணா போரட்டத்தில் ஈடுபட்ட தற்கொலை செய்ய முயன்றுள்ளார் .

மேலும், இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜெயாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மேற்பார்வையாளர் முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதனை தொடர்ந்து ஜெயாவின் போராட்டத்தை கைவிட்டு புகார் கொடுக்க முடிவு செய்தனர்.

ஜெயா என்ற பெண் திடீரேன தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதானால் , அப்பகுதி சிலநேரம் பரபரப்புக்கு உள்ளாக்கியது.