இந்தியாவில் ஒரே நாளில் 70,589 பேர் பாதிப்பு: இதுவரை 96,318 பேர் உயிரிழப்பு!

0
173

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 70,589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,45,292 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 776 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 96,318 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 84,877 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 51,01,397 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 83.01% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 9,47,576 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,42,811 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 7,31,10,041 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!
Next articleமெரினா குறித்து தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here