திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

0
213

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு (வயது 73) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். லேசான அறிகுறி மட்டும் இருந்ததால் அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஅனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!
Next articleஇந்தியாவில் ஒரே நாளில் 70,589 பேர் பாதிப்பு: இதுவரை 96,318 பேர் உயிரிழப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here