துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் ஓ பன்னீர்செல்வம்! திடுக்கிடும் அரசியல் தகவல்!

0
150

அதிமுகவில் சில காலமாகவே முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் அவர்களுக்குள் நடந்து வருகிறது. செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம்.

செயற்குழு கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசினார்களாம். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாக இருந்து வந்த முனுசாமி இபிஎஸ் ஆதரவாக மாறியுள்ளார். செயற்குழு கூட்டம் முடிந்தபின் கேபி முனுசாமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பழனிசாமி உடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்கள். மறுநாள் காலை கேபி முனுசாமி உள்ளிட்டவர்கள் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

மனமுடைந்த ஓபிஎஸ் தனது காரில் உள்ள தேசியக்கொடியை கழட்ட தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டதாகவும் தேசிய கொடி கழட்ட பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விரைவில் ஓபிஎஸ் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக ஒரு செய்தி அதிமுக வட்டாரத்தில் உலாவி வருகிறது. இதன்மூலம் தன் பக்கம் தொண்டர்களின் அனுதாப பார்வையை திருப்ப ஓபிஎஸ் எண்ணுகிறார் என்று கூறப்படுகிறது.

ஓபிஎஸ்-ன் இந்த செயலால் மக்கள் யாரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. இந்த அரசியல் ஆயுதத்தை ஹர்சிம்ரத் கவுர் மக்கள் நலனுக்காக பயன்படுத்தியதன் காரணமாக அவரும் அவரது கட்சியும் மக்களின் மத்தியில் நல்ல செல்வாக்கினை பெற்றனர்.

ஆனால் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வில்லை என்பதற்காக பதவியை ராஜினாமா செய்தால் எவரும் வரவேற்பு தர மாட்டார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் அடித்து கூறியுள்ளனர்.

 

Previous articleமின்னல் தாக்கி 65 ஆடுகள் பலி… கள்ளக்குறிச்சியில் சோகம்!
Next articleஇந்தியாவில் ஒரே நாளில் 80,472 பேருக்கு கொரோனா பாதிப்பு!