சொத்துக்காக பெற்றோர்களை துரத்திய மகன்கள் !!

0
131

சேலம் மாவட்டத்தில்,சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்றோர்களை அடித்து விரட்டியதால் தெருவுக்கு வந்த தம்பதியினர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வசித்து வரும் முனியன்-ரஞ்சிதம் ஆகிய தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் . இவர்கள் நால்வருக்கும் திருமணம் முடித்து வைத்த நிலையில், தம்பதியினருக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தை பிள்ளைகள் பெயரில் எழுதி விட்டு ஒரு சிறிய வீட்டில் அவர்களின் இறுதி நாட்களை கழித்து வந்தனர் .

சொத்தை எழுதிக் கொடுத்ததன் பின்பு , தனது மகன்களின் உண்மையான சுயரூபம் அத்தம்பதியர்களுக்கு தெரியவந்தது. அவர்களின் மூத்த மகனான ரத்தினவேல் என்பவர் ,பெற்ற தாய் தந்தை என்று சிறிதும் சிந்திக்காமல் இருவரையும் கடுமையாக தாக்கி ,வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார்.

பின்னர் உணவின்றி பல இடங்களில் அத்தம்பதியினர் தவித்து வந்த நிலையில், கொரோனா மற்றொருபுறம் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இதனால் சில நாட்கள் கழித்து ,மீண்டும் இருவரும் சொந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதனையறிந்த மூத்த மகன் ரத்தினவேல், மீண்டும் பெற்றோர்களை அடித்து துரத்தியுள்ளார்.உணவின்றி, தங்க இடமின்றி தவித்த தம்பதியினர் ,கொடுமை தாங்க முடியாமல் ஓமலூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம், தனது மகனிடமிருந்து தங்களையும், வீட்டையும் காப்பாற்றி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

மேலும் இது தொடர்பான வழக்கு குறித்து உடனடி நடவடிக்கை எடுக்ககோரி சேலம் டிஜிபி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Previous articleசன் டிவிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் விஜய் டிவி! கடவுள துணைக்கு கூப்பிட்டு இருக்கு!
Next articleவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!