வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!

0
79

தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த 6 மாவட்டங்கள்  மற்றும் வட மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கிருஷ்ணகிரி, தர்மபுரி ,திருவண்ணாமலை ,வேலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகயும் , வெற்பசலனம்  பொருத்தவரை அதிகபட்ச வெப்ப நிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸாக  பதிவாக கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை திருப்பத்தூர் (வடபுதுப்பட்டு) , கடலூர்(வேப்பூர்),ஆகிய பகுதிகளில் 13 சென்டிமீட்டர் மழையும்,கடலூர் (சிதம்பரம்), திருவண்ணாமலை (கலசபாக்கம்) பகுதிகளில் 9 சென்டி மீட்டர் மழையும் ,ராணிப்பேட்டை (காவேரிப்பாக்கம்),ஈரோடு (கோபிசெட்டிபாளையம்) கரூர் (மைலம்பட்டி),திருப்பத்தூர் (வாணியம்பாடி) ஆகிய பகுதிகளில் ஏழு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் மத்திய வங்கக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதினால், தென்மேற்கு திசையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.