பிளே ஸ்டோர் (Play store) விதிமுறைகளை மீறியதாக ஜோமாடோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) நிறுவனங்களுக்கு கூகுள் (Google) நோட்டீஸ் அனுப்பியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர்களை கவருவதற்காகவும், விற்பனையை பெரிய அளவில் அதிகரிக்கவும் தங்கள் செயலிகளில் ஆன்லைன் சூதாட்ட அம்சங்களை பல்வேறு நிறுவனங்கள் சேர்த்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையிலும் வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாகவும் பிளே ஸ்டோரில் இருந்து பல்வேறு செயலிகள் தற்போது நீக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஜோமாடோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கும் கூகுள் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.