தமிழகத்தில் அக். 05 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

0
189

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,395 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,25,391 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 62 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,846 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,572 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் மொத்த எண்ணிக்கை 5,69,664 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தேதியில் 45,881 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 82,725 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 77,82,736 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று மட்டும் 1,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,74,143 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 19 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 3,293 ஆக உள்ளது.

Previous articleகொரோனா தொற்றின் தற்போதைய நிலை! மகிழ்ச்சியில் மக்கள்!
Next articleசசிகலா விடுதலை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தாதாம்! சொன்னது யார் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here