கொரோனா தொற்றின் தற்போதைய நிலை! மகிழ்ச்சியில் மக்கள்!

0
75

இந்த கொரோனா தொற்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்தது. இந்த நோய்க்கு பல லட்சம் பேர் பலியாகினர். இந்நோய் இந்தியாவிற்கும் பரவியது, மார்ச் மாதம் இறுதியிலிருந்து இந்தியாவில் முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது, மக்கள் அனைவரும் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். 

தற்போது கடந்த மாதத்திற்கான அறிக்கை மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் மாதத்தில் கொரோனா தொற்று  உச்சகட்டத்தை கடந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் கொரோனா தொற்று  பெரும் பாதிப்பை ஏற்படுத்தி அதன் பின் குறையத் தொடங்கியுள்ளது. அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தில் இருந்து 82 ஆயிரமாக குறைந்துள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், இந்தியா பெரும் பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தில் ஜிடிபி 24 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது. தற்போது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றே பொருளாதாரம் ஏற்றம் கண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 66,23,515 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில் 55,85,645 பேர் குணமடைந்துள்ளனர். 1,02,723 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 9,34,216 பேர் தீவிர சிகிச்சைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K