இந்தியாவில் ஒரே நாளில் 61,267 பேருக்கு கொரோனா! அக். 6 கொரோனா பாதிப்பு நிலவரம்!

0
140

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 61,267 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,85,082 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 884 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,03,569 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 75,787 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 56,62,490 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 84.70% பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய தேதியில் 9,34,427 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,19,023 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 10,89,403 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 8,10,71,797 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleதனித் தொகுதியில் போட்டியிட்ட போது இருந்த சாதியை திருமணத்தின் போது ஒழித்து விட்டாரா கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ? சமூக ஆர்வலர்கள் விளாசல்
Next articleBig Boss Season 4 முதல் நாள் நேற்று நடந்தது என்ன! இந்த வார Captain யார் தெரியுமா?