Big Boss Season 4 முதல் நாள் நேற்று நடந்தது என்ன! இந்த வார Captain யார் தெரியுமா?

0
204

அக்டோபர் 4 அன்று 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். பாதி பெண்கள் அனைவரும் தங்களுக்குரிய ரூமில் படுத்து உறங்கினர். ஆண்கள் அனைவரும் வெளியில் லிவ்விங் ஏரியாவில் படுத்து உறங்கினார்கள்.

அனைவரும் பேசிக் கொண்டிருக்க உடனே மின்விளக்குகள் அணைந்தன. உடனே நிஷா பிக்பாஸ் தங்க் யூ பிக் பாஸ் இப்போது எல்லோரும் என் நிறத்தில் தெரிவார்கள் என்று கலாய்க்க சிரித்துக்கொண்டு எல்லாரும் உறங்க சொல்கிறார்கள். சிவானி வெளியே வருகிறார். அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை போலும்.

அங்கு சக்கரவர்த்தியும் இருக்க இருவரும் நடக்கின்றார்கள் வெளியே. அப்பொழுது நல்லா பாடுறீங்க என்று சக்கரவர்த்தி சொல்ல, நான் வேண்டுமானால் கண்மணி அன்போடு காதலன் அந்த பாட்டை பாட வா என்று கேட்க சிவானியும் அழகாகப் பாடுகிறார்.

அப்பொழுது ஆரி அர்ஜுன் வெளியே வர எதையோ தேடுகிறார். அப்பொழுது அங்கே இருக்கும் போர்வையை எடுத்துக்கொண்டு வந்து யார் மீதோ போர்த்தி விடுகிறார்.

அடுத்த நாள் காலை விடிகிறது. வாத்தி கம்மிங் பாட்டு போடுகிறார்கள் அனைவரும் குதூகலமாக ஆடுகிறார்கள்.

ஒருபுறம் அனைவரும் சமைத்துக் கொண்டு இருக்க பெண்கள் அனைவரும் தங்களது ரூமில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டில் படுத்துக் கொண்டு நிஷா கேமராவை பார்த்து கேமராவிற்கு ப்ரொபோஸ் செய்துகொண்டிருக்கிறார். நிஷா தன்னுடைய இயல்பான நகைச்சுவைகள் முலம் அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.

உடனே ரேகா  என்னுடைய கம்மலை காணவில்லை, என்னுடைய டிரஸ் காணவில்லை என்று வாங்கிக் கொடுங்கள் என்று அனைவரையும் டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்.
அதற்கு நிஷா காமெடியாக ஏதோோ சொல்ல நன்றாகவே நேற்று பிக்பாஸ் போனது.

அனிதா சம்பத் நாம் அனைவரும் விளையாடலாம் என்று கூறி பழைய கால விளையாட்டு ஒன்றை கூறுகிறார். டிக் டிக் யாரது ,திருடன், அந்த விளையாட்டை கூறுகிறார் அனைவரும் விளையாடுகிறார்கள்.

அனைவரும் விளையாட அப்பொழுது நிஷா அவுட்டாக, நிஷா விளையாடி ஓடிப் போய் பிடிக்கப் போக, நிஷா கவிழ்ந்து விழுகிறார். அதையும் காமெடியாக எடுத்துக் கொண்டு எழுந்து விடுகிறார் நிஷா.

பின் அனைவரையும் கார்டனுக்கு அழைக்கிறார் பிக்பாஸ். அதில் மேலே பந்துகள் கட்டப்பட்ட மூட்டை உள்ளது. அனைவரும் சுற்றி நின்று அதை யாராவது ஒருத்தர் கலட்டி விட வேண்டும் என்று கூறுகிறார். கழட்டி விட்டதும் பந்துகள் விழுகின்றன. அனைவரும் ஆளுக்கு ஒரு பந்தை எடுத்துக் கொள்கின்றனர். யாரிடம் பந்து இல்லையோ அவர் அப்படியே நின்று விடுகின்றனர். கடைசியில் ரம்யா பாண்டியன் கையில் பந்து இல்லாமல் போனது. உடனே பிக்பாஸ் ரம்யா பாண்டியனை உள்ளே அழைக்கிறார்.

அங்கு பார்த்தால் ரம்யா பாண்டியன் தான் அந்த வாரத்தின் கேப்டன் என்கிறார்.
அதனுடன் அனைத்து வேலைகளையும் செய்யுமாறு பிக் பாஸ் சொல்ல அனைவருக்கும் பிரித்து கொடுக்கிறார் ரம்யா பாண்டியன்.

அடுத்து மற்றொரு டாஸ்க் Heart And Heart Break இரண்டு இருக்கும். நால்வரை அழைத்து பிடித்தவர்களுக்கு இரண்டு பேருக்கும் Heart தரவேண்டும். பிடிக்காதவர்களுக்கு Heart Break தரவேண்டும்.

அதில் அனைவரும் டார்கெட் செய்வது சிவானியை தான் இருந்தது. பாவம் ஷிவானியின் முகமே மாறிவிட்டது. அழுந்து விடுவார் போலும். யாருடனும் அதிகம் பேசவில்லை Immaturity என்றெல்லாம் பாவம் அவரை கடுப்பேத்தி விட்டிருக்கின்றனர். அடுத்தது சனம் ஷெட்டியை எல்லாரும் நடிப்பதாக முதல் நாளே கூறிவிட்டனர். ரேகா கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும் கூறுகின்றனர். ரம்யா பாண்டியன் Heart வாங்குகிறார்.
இத்துடன் நேற்றைய பிக்பாஸ் முடிவடைந்தது.

 

 

Previous articleஇந்தியாவில் ஒரே நாளில் 61,267 பேருக்கு கொரோனா! அக். 6 கொரோனா பாதிப்பு நிலவரம்!
Next articleஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மரணம்…! கிருஷ்ணகிரியில் சோகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here